நடிகர் பிரசன்னா, புன்னகை அரசி சினேகாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர காதல் தம்பதிக்கு தற்போது 5 வயதில் விஹான் என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சினேகா தலை காட்ட துவங்கியதும், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார்.
கடைசியாக இவர் 'பட்டாசு' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயின்று நடித்தார். இதற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்தது.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளனர்.
சமீபத்தில் தான் சினேகா - பிரசன்னா தம்பதியின் செல்ல மகள் முதல் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
குழந்தைக்கு ஒரு வயதே ஆவதால், தற்போது திரைப்படங்களை நடிக்காமல் இருக்கும் சினேகா, பல்வேறு விளம்பரங்களில் கணவருடனும், தனியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினேகா தன்னுடைய மகன், மற்றும் மகளுடன் பெட்டில் படுத்த படியே, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துளியும் மேக்அப் இன்றி, தூங்கி எழுந்த பின்னரும் பளீச் முகத்தில் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில், லைக்குகள் குவிந்து வருகிறது.