Published : Feb 07, 2022, 02:42 PM ISTUpdated : Feb 07, 2022, 02:45 PM IST
மாநாடு படத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தன்னுடைய சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.. செம காஸ்ட்லியாக மாறிய இவரால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியுள்ளதாக தெரிகிறது..
குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, நியூ, நண்பன், இறைவி போன்ற படங்களில் திறம்பட நடித்து, தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார்.
29
sjsurya
இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததால் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஸ்ட் விட்டார்.
39
sjsurya
அதுவரை ஹீரோவாகவும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவை, வில்லனாக்கி அழகு பார்த்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
49
sjsurya
மகேஷ் பாபு என்கிற மிகப்பெரிய நடிகர் அப்படத்தில் நடித்திருந்த போது, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்து நின்றது. காரணம் அவரது வில்லத்தனம் தான்.
59
sjsurya
'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார் எஸ்ஜே சூர்யா.
69
sjsurya
இதையடுத்து நடிகர் எஸ்ஜே சூர்யா அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தினார்.
79
sjsurya
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்கிற வில்லன் கதாபாத்திரத்தை தனக்கெ உரித்தான நக்கல் நையாண்டியுடன் நடித்து மெருகேற்றி இருந்தார்.
89
sjsurya
சிம்புவைப் போல் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு தந்த மவுசால், இனி வில்லன் வேடங்களில் நடிப்பதென முடிவெடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
99
sjsurya
இந்நிலையில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் எஸ்ஜே சூர்யாவை தெலுங்கில் நடிக்க வைக்க சமீபத்தில் அணுகியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் நடிக்க எஸ்ஜே சூர்யா 7 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டதாகவும், இதைக் கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.