அமரன் 100 நாள் வெற்றி கொண்டாடத்தில் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சிவகார்த்திகேயன்!

Published : Feb 16, 2025, 09:21 AM IST

Sivakarthikeyan Talk About Amaran Salary : அமரன் படத்திற்கான சம்பளம் குறித்து சிவகார்த்திகேயன் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அவருக்கு முழு சம்பளமும் வழங்கப்பட்டதா?

PREV
15
அமரன் 100 நாள் வெற்றி கொண்டாடத்தில் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சிவகார்த்திகேயன்!
அமரன் சம்பளம் குறித்து சிவகார்த்திகேயன் அதிர்ச்சி தகவல்

Sivakarthikeyan Talk About Amaran Salary : சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் அமரன். பேர், புகழ் எல்லாமே கொடுத்தது. ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்த நடிகர் என்ற சாதனையை சிவகார்த்திகேயனுக்கு அமரன் பெற்றுக் கொடுத்தது. அதற்கு முன்னதாக வந்த எந்தப் படமும் ரூ.150 கோடிக்கு மேல் குவிக்கவில்லை. முதல் முறையாக சிவகார்த்திகேயன் ரூ.300 கோடி வசூல் குவித்த மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பெற்றார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயந் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்தார்.

25
அமரன் சம்பளம் குறித்து சிவகார்த்திகேயன் அதிர்ச்சி தகவல்

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கடந்த சில மாதங்களில் திரைக்கு வந்து அதிக நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலில் அமரன் முதலிடம் பிடித்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சில தினங்களுக்கு முன்பு அமரன் படத்தின் 100 நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

35
அமரன் சம்பளம் குறித்து சிவகார்த்திகேயன் அதிர்ச்சி தகவல்

சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னேறி வருகிறார். இந்தப் படத்தில் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கினார் என்ற தகவல் பரவியது. ஆனால், அமரன் 100வது நாள் விழாவில், சிவகார்த்திகேயன் தனது சம்பளம் குறித்து கூறிய கருத்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மயிலு பெத்த மகளை தமிழுக்கு கொண்டு வரும் பா ரஞ்சித்! ஆனால் ஒரு ட்விஸ்ட்?
 

45
அமரன் 100 நாள் வெற்றி கொண்டாடத்தில் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சிவகார்த்திகேயன்!

அமரன் 100 நாள் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், "எனது வாழ்க்கையில் முதல் முறையாக சரியான நேரத்தில் சம்பளம் பெற்றுள்ளேன். இது மிகவும் அரிதானது. சில நேரங்களில் எனது சம்பளத்தில் பாதியைத் திருப்பித் தருவார்கள். ஆனால், முதல் முறையாக படம் வெளியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனது முழு சம்பளத்தையும் பெற்றுள்ளேன்." என்று கூறினார்.

அஜித் போலீசா நடிக்க இருந்த முதல் படம் இந்த படமா? படம் ரிலீஸ் ஆகலையா?
 

55
அமரன் 100 நாள் வெற்றி கொண்டாடத்தில் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சிவகார்த்திகேயன்!

அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் அதிக சம்பளத்தை விட்டுக்கொடுத்தது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. இந்த விஷயத்தை அயலான் ஆடியோ வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு நோ சொல்லிவிட்டு; தனுஷுக்கு ஓகே சொன்ன அனிருத்!
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories