அடிமட்ட விலைக்கு விற்கப்பட்ட ‘அயலான்’ பட சாட்டிலைட் உரிமை... அதுக்குன்னு இவ்வளவு கம்மியாவா..! பின்னணி என்ன?

First Published | Apr 25, 2023, 1:48 PM IST

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பான் இந்தியா படமான அயலான் படத்தின் சாட்டிலைட் உரிமை கம்மி விலைக்கு விற்கப்பட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி முதலில் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைகாண உள்ளது.

அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் ராஜா மற்றும் கே.ஜே.ஆர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகளவிலான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் கொண்ட படமாக இது இருக்குமாம். இந்த படத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படக்குழுவே அண்மையில் அறிவித்தது.

அயலான் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படி மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை மிகவும் கம்மியான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம். கொரோனா காலகட்டத்துக்கு பின் படங்களின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டு வருகின்றன. 

இதையும் படியுங்கள்... 19 வருஷத்துக்கு முன் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிய லோகேஷ் கனகராஜ் - அடடா அதுவும் இந்த படத்திலா?

Tap to resize

ஆனால் அயலான் படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் மிகவும் கம்மியான விலைக்கு விற்கப்பட்டதற்கு காரணம், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை இப்படம் அறிவிக்கும் போதே, அதாவது 2017-ம் ஆண்டே சன் டிவிக்கு விற்றுவிட்டாராம் தயாரிப்பாளர் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் ராஜா. அந்த சமயத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த அவர், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகையை  வைத்து ஷூட்டிங்கை தொடங்கிவிடலாம் என கணக்கு போட்டு விற்றிருக்கிறார்.

ஆனால் அவர்போட்ட கணக்கு தப்புக் கணக்கு ஆகிவிட்டது. தற்போது அந்த சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்திருந்தால் அதைவிட பல மடங்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் அந்த சமயத்தில் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்துவிட்டு தற்போது புலம்புகிறார்களாம். சாட்டிலைட் உரிமை மூலம் பணம் வர வாய்ப்பு இல்லாததால், அயலான் படத்தில் திரையரங்க உரிமையை எப்படியாவது ரூ.100 கோடிக்கு விற்பனை செய்துவிட வேண்டும் என்கிற ஐடியாவில் இருக்கிறதாம் படக்குழு. அதெல்லாம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஸ்பெஷல் நபருக்கு பரிசாக கொடுக்க... பிரம்மாண்ட அப்பார்ட்மென்டை வாங்கிய ஆலியா பட் - அதன் மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!