கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் படமும், இந்த வருடம் வெளிவந்த டான் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதனால் இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அனுதீப் இயக்கியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கார்த்தியின் சர்தார் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்த படம் தீபாவளிக்கு ரிலீசாவது இதுவே முதன்முறை.
அப்போது பேசிய அவர், அயலான் படத்தில் கம்பியூட்டர் கிராபிக்ஸ் அதிகளவில் இருப்பதால் அதனை முடிக்க தாமதமாகி வருகிறது. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி இப்படம் குறித்து மேலும் ஒரு சிறப்பம்சத்தை கூறிய சிவகார்த்திகேயன். இதன் கம்பியூட்டர் கிராபிக்ஸ் பணிகளை சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் தான் செய்து வருவதாகவும், படத்தில் பணியாற்றிய பெரும்பாலானோர் நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் என தெரிவித்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... AK 61 : நடிகர் அஜித் விரும்பாத செயல்! AK61 படத்தின் அப்டேட் கேட்டு கையில் பிளேடால் எழுதிக்கொண்ட ரசிகர்!