டெல்லியில் அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி மட்டுமின்றி பராசக்தி படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு 'நம்ம ஊரு மோடி பொங்கல்' என்று பெயரிட்டிருந்தனர். இந்த விழாவில் பாஜக நிர்வாகிகளான அண்ணாமலை, நிர்மலா சீதாராமன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
24
மோடியை சந்தித்த பராசக்தி டீம்
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விழாவில் பராசக்தி படக்குழுவினரான சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களின் பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. அப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், அப்படக்குழுவினர் மோடியுடன் பொங்கல் கொண்டாடி இருப்பது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.
34
மோடி பேசியது என்ன?
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரத்தின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைத்தார். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல, மாறாக ஒட்டுமொத்த நாட்டின் பகிரப்பட்ட பாரம்பரியம் என்று அவர் கூறினார். அவர் பேசியதாவது : “தமிழ் கலாச்சாரம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல; அது ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம். உண்மையில், இது அனைத்து மனிதகுலத்தின் பகிரப்பட்ட மரபு. நான் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வைப் பற்றி பேசும்போது, பொங்கல் போன்ற பண்டிகைகள் இந்த உணர்வை இன்னும் வலுவாக்குகின்றன," என்று பிரதமர் மோடி கூறினார்.
"பொங்கல் இன்று உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதும், தமிழ் சமூகத்தினரும், தமிழ் கலாச்சாரத்தை விரும்புபவர்களும் இதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள், நானும் அவர்களில் ஒருவன். இந்த சிறப்புமிக்க பண்டிகையை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவதில் நான் பெருமைப்படுகிறேன். நம் வாழ்வில், பொங்கல் ஒரு இனிமையான அனுபவம் போன்றது. இது நமது உணவு வழங்குநர்களான விவசாயிகளின் கடின உழைப்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், இந்த விழா இயற்கை, குடும்பம் மற்றும் சமூகத்திற்கு இடையே சமநிலையை பேணுவதற்கான வழியைக் காட்டுகிறது," என்று பிரதமர் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.