புறநானூறு இல்ல; சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படத்தின் டைட்டில் லீக் ஆனது!

First Published | Jan 2, 2025, 9:24 AM IST

SK 25 Movie Title : சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் எஸ்.கே.25 திரைப்படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

SK 25 Movie

அமரன் படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் எஸ்.கே.25. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அவர் தமிழில் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

Sudha Kongara, Sivakarthikeyan

எஸ்.கே.25 திரைப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். மேலும் அதர்வா முரளியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எஸ்.கே.25 திரைப்படம் முதலில் புறநானூறு என்கிற பெயரில் நடிகர் சூர்யாவை வைத்து எடுப்பதாக இருந்தது. இருப்பினும் அப்படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக உள்ளதால் அதில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து தான் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆனார்.

இதையும் படியுங்கள்... SK25 படத்தில் ஏன் நடிக்க ஒத்துக் கொண்டேன் தெரியுமா? காரணத்தை சொன்ன அதர்வா!

Tap to resize

Jayam Ravi, Sivakarthikeyan

எஸ்.கே.25 திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது திரைப்படம் ஆகும். எஸ்.கே.25 திரைப்படத்திற்கு கடந்த மாதம் பூஜை போடப்பட்டது. இப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜெயம் ரவிக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனும் ரூ.50 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

SK 25 Movie Title

இந்நிலையில், எஸ்.கே.25 திரைப்படத்தின் டைட்டில் என்ன என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது. ஆரம்பத்தில் இப்படத்திற்கும் புறநானூறு என பெயரிடப்பட உள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது வேறு தலைப்பை வைத்துள்ளார்களாம். இப்படம் 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாவதால், இப்படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டுள்ளதாம். மலையாளத்தில் 2018 என வருடத்தின் தலைப்போடு வந்த படம் சக்கைப்போடு போட்டதை மனதில் வைத்து எஸ்.கே.25 படத்திற்கு 1965 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தளபதி ஸ்டைலில்; உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!

Latest Videos

click me!