
பொங்கல் பண்டிகைக்கு புதுப்படங்கள் அதிகளவில் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி படமும், ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால், அதனுடன் போட்டிபோட சிறு பட்ஜெட் படங்கள் தயங்கி வந்தன. இதனிடையே அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், அதற்கு பதிலாக அரை டஜன் படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
வணங்கான்
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் வணங்கான். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.
கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படம் ஜனவரி 10ந் தேதி திரைக்கு வருகிறது.
2கே லவ் ஸ்டோரி
நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 2கே லவ் ஸ்டோரி. இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ஆனந்த கிருஷ்ணா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் வருகிற ஜனவரி 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.
காதலிக்க நேரமில்லை
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவி - நித்யா மேனன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
படைத் தலைவன்
கேப்டன் விஜயகாந்தின் மகன் ஷண்முகப் பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படம் படைத் தலைவன். இப்படத்தை அன்பு இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!
சுமோ
மிர்ச்சி சிவா நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள படம் சுமோ. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
மெட்ராஸ்காரன்
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மெட்ராஸ்காரன். இப்படத்தில் மலையாள நடிகர் ஷான் நிகம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், நிகாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டென் ஹார்ஸ்
இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டென் ஹார்ஸ். இப்படத்திற்கு ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தருணம்
தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தருணம். இப்படத்தில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!