Published : Jan 01, 2025, 05:13 PM ISTUpdated : Jan 01, 2025, 06:25 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தை பக்தியுடன் வரவேற்று, நடிகை சாய் பல்லவி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார்.இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
லேடி பவர் ஸ்டாராக அறியப்படும் சாய் பல்லவி, தனது அற்புத நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரின் எளிமையான தோற்றமும், அனுசரணை நிறைந்த பேச்சும் தான் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது. இந்தக் காரணத்திற்காக தான் லேடி பவர் ஸ்டார் என்றும் சாய் பல்லவை தெலுங்கு ரசிகர்களால் அழைக்க படுகிறார்.
25
Sai Pallavi Movies
சாய் பல்லவி சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான `அமரன்` திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சுமார் 300 கோடி வரை இந்த படம் வசூல் செய்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பை விட, சாய் பாலாவின் நடிப்பு தான் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் மிகவு சாதாரணப் பெண்ணாக, பக்தர்களில் ஒருவராகக் காட்சியகழிக்கிறார் சாய் பல்லவி. சில நடிகைகள், பார்ட்டி, வெளிநாடு என புத்தாண்டை விமர்சியாக கொண்டாடும் நிலையில்.. சாய் பல்லவியின் இந்த எளிமை பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
45
Sai Pallavi In Puja
புத்தாண்டு தினத்தன்று சாய் பல்லவி தன்னுடைய குடும்பத்துடன் பூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அனைவருடனும் சேர்ந்து கோயிலுக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டார். புத்தாண்டை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் தியானம் செய்தார். சாதாரண பக்தர்களில் ஒருவராக புட்டபர்த்தி பாபா கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சாய் பல்லவியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் சிவப்பு நிற லெஹங்கா உடையில் காட்சியளிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் எளிமையை தான் விரும்புகிறேன் என அடிக்கடி சொல்லும் சாய் பல்லவி அதை பலமுறை தன்னுடைய செயல்களிலும் இது போல் நிரூபித்து வருகிறார். எவ்வளவு உயர்ந்தாலும் எளிமையாகவே இருக்க வேண்டும் என்பதற்கு சாய் பல்லவி ஒரு சிறந்த உதாரணம்.
சாய் பல்லவி இந்த ஆண்டு நாக சைதன்யாவுடன் `தண்டேல்` படத்தில் நடித்து முடித்துள்ளார். சந்து மொண்டேட்டி இயக்கும் இந்தப் படத்தை, கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.