புர்ஜ் கலீபா முன்பு கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா! வைரல் போட்டோ!

First Published | Jan 1, 2025, 4:25 PM IST

நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் 2025-ஆம் ஆண்டு புத்தாண்டை ரொமான்டிக்காக வரவேற்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

Nayanthara and Vignesh shivan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். கடந்த 2023 ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்த நயன்தாராவுக்கு, கடந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ஒரு சர்ச்சையான வருடம் என சொல்லும் அளவுக்கு, நயன்தாரா - தனுஷு இடையே நடந்த பிரச்சனை தான் அதிகம் பேசப்பட்டது.
 

Nayanthara Movies

ஆனால் இந்த ஆண்டு நயன்தாரா ஆண்டாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். சுமார் 8 படங்கள் இவரின் கைவசம் உள்ள நிலையில், தற்போது தமிழில் பெயரிடாத திரைப்படம், ராக்காயி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள், கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

விலகியது 'விடாமுயற்சி'! பொங்கல் ரேஸில் இணைந்த 2 புதிய படங்கள்!
 

Tap to resize

Nayanthara Upcoming Movies

இதை தவிர மலையாளத்தில் டியர் ஸ்டூடன்ட் மற்றும் எம் எம் எம் என் என்கிற திரைப்படமும், கன்னடத்தில் யாஷுக்கு சகோதரியாக டாக்சிக் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை திரையுலகில் நிலை நிறுத்தி கொண்டுள்ள நயன்தாரா, தன்னுடைய கணவர் இயக்கியுள்ள LIK படத்தை தயாரித்துள்ள நிலையில் இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, கிருதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 

Nayanthara and Vignesh shivan

எவ்வளவு பிசியாக இருந்தாலும், புத்தாண்டு - பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளை வெளிநாட்டில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா, இந்த முறை துபாயில் தான் தன்னுடைய 2025-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை வரவேற்றுள்ளார்.

டீச்சரையே கரெக்ட் செய்த ஸ்டூடெண்ட்! ரொமான்டிக் புகைப்படத்தோடு காதலை அறிவித்த விஜய் டிவி பிரபலங்கள்!

Nayanthara Celebrating new year

ஏற்கனவே நயன்தாரா மாதவனின் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில், விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தபடி, புர்ஜ் கலீபா முன்பு நயன்தாரா புத்தாண்டை வரவேற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Latest Videos

click me!