வில்லங்கத்தில் சிக்கிய விடாமுயற்சி; பொங்கல் ரேஸில் இருந்த ஜகா வாங்க காரணம் இதுதானா?

Published : Jan 02, 2025, 08:43 AM ISTUpdated : Jan 02, 2025, 10:55 AM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

PREV
15
வில்லங்கத்தில் சிக்கிய விடாமுயற்சி; பொங்கல் ரேஸில் இருந்த ஜகா வாங்க காரணம் இதுதானா?
vidaamuyarchi

நடிகர் அஜித்குமாரின் 62-வது படம் தொடங்கியதில் இருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இதற்கான ஷூட்டிங்கெல்லாம் தொடங்க ரெடியான சமயத்தில் திடீரென கதையில் திருப்தியில்லை எனக்கூறி விக்னேஷ் சிவனை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். இதையடுத்து மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க கமிட் ஆகி, கடந்த 2023ம் ஆண்டு படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகளை மேற்கொண்டார்.

25
Vidaamuyarchi Update

இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அங்கு இரண்டு மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, பின்னர் சென்னைக்கு திரும்பியது. பின்னர் அஜித்தின் தந்தை இறந்ததால் சில மாதங்கள் படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். இதையடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி கடந்த மாதம் தான் நிறைவு செய்தனர். படத்தின் டப்பிங் பணிகளையும் அஜித் அண்மையில் நிறைவு செய்தார்.

இதையும் படியுங்கள்... ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்; விடாமுயற்சிக்கு பதில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

35
Ajith, Trisha

படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. புத்தாண்டன்று விடாமுயற்சி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு பேரிடியாக வந்தது ஒரு அப்டேட். அதில் விடாமுயற்சி திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தனர். இதனால் அப்செட் ஆன ரசிகர்கள் படக்குழுவை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

45
Vidaamuyarchi Postponed

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து கடைசி நேரத்தில் ஜகா வாங்கியதற்கான காரணம் கசிந்துள்ளது. இப்படம் பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்தது. அதன் ரீமேக் உரிமையை முறையாக வாங்காததே தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாம். பிரேக் டவுன் படத்தை தயாரித்த பாராமவுண்ட் நிறுவனம் ரீமேக் உரிமைக்காக ரூ.85 கோடி கேட்கிறதாம்.

55
Vidaamuyarchi Breakdown Remake

அது விடாமுயற்சி பட பட்ஜெட்டின் பாதி தொகை என்பதால், அதற்கு பதில் விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு உரிமையை அந்நிறுவனத்துக்கு வழங்கும் முடிவுக்கு லைகா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறதாம். அது சுமூகமாக முடிந்தால் வருகிற ஜனவரி 26-ந் தேதியே விடாமுயற்சி படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!

click me!

Recommended Stories