மாவீரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளதால், அங்கும் இப்படத்தை புரமோட் செய்ய தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி இன்று ஐதராபாத்திலும், நாளை கேரளா மற்றும் பெங்களூருவிலும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அடுத்தபடியா வருகிற ஜூலை 10-ந் தேதி சென்னையில் இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது.