Kajal Aggarwal
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை கரம்பிடித்தார். இதையடுத்து இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் கிச்சிலு என பெயரிட்டுள்ளனர். தற்போது அவரது மகனுக்கு ஒரு வயது ஆகிறது.
Kajal Aggarwal
குழந்தை பிறந்த பின்னரும் நடிகை காஜல் அகர்வால், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதனிடையே இந்த இரண்டு படங்களில் நடித்து முடித்த பின்னர் காஜல் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் பரவின.
இதையும் படியுங்கள்... நடிகர் கார்த்தி மகள் உமையாள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..!
Kajal Aggarwal
மகனை சரிவர கவனித்துக் கொள்ளவும், அவனுடன் நேரம் செலவிடமும் முடியாத காரணத்தால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த காஜல், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், சமீபத்தில் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய மகனின் ஒரிஜினல் பெயரை வெளியிட்டுள்ளார்.
Kajal Aggarwal
அதன்படி அவர் கூறியதாவது : “சிவனின் மீது அதீத பக்தி கொண்டவள் நான். அதனால் என்னுடைய மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்ட முடிவெடுத்தேன். அதேபோல் சுலபமாக அழைக்கக்கூடிய பெயராக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அந்த வகையில் சிவபெருமானின் மற்றொரு பெயரான நீலகண்டன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நீல் என பெயரிட்டதாக கூறி இருக்கிறார்”. இதை அறிந்த ரசிகர்கள் காஜலுக்கு கடவுள் மீது இவ்ளோ பக்தியா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சின்னத்திரை நயந்தாரானா சும்மாவா? மேகசீனுக்கு மிதமிஞ்சிய அழகில் போஸ் கொடுத்த வாணி போஜன்!