சின்னத்திரை நயந்தாரானா சும்மாவா? மேகசீனுக்கு மிதமிஞ்சிய அழகில் போஸ் கொடுத்த வாணி போஜன்!
நடிகை வாணி போஜன்... ஊதா நிற உடையில் மேகசீனுக்கு மிதமிஞ்சிய அழகில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்து, நெட்டிசன்கள் சின்னத்திரை நயன்தாரா என இவரை வர்ணித்து வருகிறார்கள்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன், வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து, அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் போதும்... பலர் இவரை சின்னத்திரை நயன்தாரா என்றே தற்போது வரை வர்ணித்து வருகிறார்கள்.
வெள்ளித்திரையில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி, தற்போது பரத், விக்ரம் பிரபு, வைபவ் போன்ற ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வருகிறார் வாணி. சமீபத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த, 'பாயும் ஒளி நீ எனக்கு', திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திரவா, லவ், ரேக்ளா, ஆர்யன் என அரை டஜன் படங்கள் உள்ளன.
சின்னத்திரையை தாண்டி, வெப் சீரிஸ் மற்றும் மாடலிங் போன்ற வற்றிலும் கவனம் செலுத்தி வரும் இவர்... தற்போது மிரட்டல் அழகில் வரா என்கிற மேகசீனுக்கு, விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்களை வாணி போஜன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, ரசிகர்கள் தாறுமாறாக ரசித்து வருகிறார்கள்.
ஊதா நிற லெகங்கா அணிந்து, அதற்கு ஏற்றப்போல் ஸ்டோன் பதிக்கப்பட்ட கிராண்ட் நெக் பீஸ், கம்மல் , வளையல் மற்றும் மோதிரங்கள் மேட்சிங்காக அணிந்து... கொண்டையில் வெள்ளை நிற ரோஜாவுடன் மிகவும் சட்டில்லாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் சின்னத்திரை நயந்தாரானா சும்மா வா? என வர்ணித்து வருகிறார்கள்.
நான் தற்கொலை செய்து கொண்டால்? அது திட்டமிட்ட கொலை! ஷாக் கொடுக்கும் டிடிஎப் வாசன்!