அப்பா சிவக்குமார் மற்றும் அண்ணன் சூர்யாவை தொடர்ந்து, நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக... நடிப்பு துறையையே தேர்வு செய்தார் கார்த்தி. சினிமாவில், சூர்யாவை விட கார்த்திக்கு அதிஷ்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். காரணம் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி, தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல வருடங்கள் போராடினார். ஆனால் கார்த்தி தன்னுடைய முதல்படமான பருத்திவீரன் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.