பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் சாய் பல்லவி. அப்படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் சாய் பல்லவி. இதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.