தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டான், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படம், ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
அதேபோல் அயலான் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இதுதவிர தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே.20 படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.