அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்

Published : Dec 15, 2025, 04:51 PM IST

அஜித்துடன் மாப்பிள்ளை சார் சபரீசன் கார் ரேஸ்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதருமே என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

PREV
13
Soodu Vacha Maari, Ajith Brother In Law Sabarisan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் குமார் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்களுக்கு பிறகு சினிமாவிற்கு தற்காலிகமாக ரெஸ்ட் கொடுத்த அஜித் குமார் இப்போது கார் ரேஸில் பிஸியாக பங்கேற்று வருகிறார். அஜித்தின் ரேஸிங் நிறுவனம் அனைத்து கார் ரேசிகளிலும் சென்று வெற்றியை குவித்து வருகிறது. தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார் அஜித்குமார்.

மலேசியா ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் அஜித் குமார் உடைய ரேஸ் கார் பழுதாகி நின்றதன் காரணமாக அவரால் போட்டியில் தொடர முடியவில்லை. இதே குறித்து பேட்டி கேட்டதற்கு அஜித்குமார் இது ஒரு சாதாரணமான விஷயம் தான் இதற்கு கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார்.

23
Sivaji Krishnmoorthy Mocks Ajith Fans

மலேசியாவில் நடக்கும் அஜித்குமாரின் கார் ரேஸிற்கு சிம்புவும் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீலீலாவும் சென்று அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் இப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் அஜித்தின் கார் ரேஸ் நிகழ்ச்சியை காண மலேசியா சென்றுள்ளார். 

அங்கு அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. தி.மு.க. பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அரசியல் மேடைகளில் பேசுவதற்கென்றே ஒரு தனி ஸ்டைலை வைத்திருப்பவர். அவர் பிரபலங்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பேசும்போது சர்ச்சைகள் வெடிப்பது வழக்கம்.

33
Sivaji Krishnmoorthy Ajith Sabarisan

மாப்பிள்ளை சார் என்று அழைக்கப்படும் சபரீசன். இவர் முதல்வர் மு க ஸ்டாலின் மருமகன் எனக் குறிப்பிடப்படுகிறது இவர் மலேசியாவில் நடக்கும் அஜித்தின் கார் ரேஸ்க்கு பார்க்க சென்றுள்ளார். அஜித்தின் ஜெஸ்ஸியான ரெட் கலர் ஜெஸ்ஸியை அணிந்து அஜித் குமாருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இப் புகைப்படத்தை பார்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்த அஜித் குமாருடன் மாப்பிள்ளை சார் சபரிசனா சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே என்று அஜித் ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக பேசி நக்கலாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பேச்சு சோஷியல் மீடியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அஜித் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அஜித்துக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சபரீசன் மலேசியாவுக்கு சென்று ஆதரவை தெரிவித்தார். ஆனால் இதை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories