நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்திக், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் டிசம்பர் 12-ந் தேதியில் இருந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அதன் புது ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.
கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இதற்கு முன்னதாக இவர் இயக்கிய சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால், இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
24
வா வாத்தியார் ரிலீஸ் தள்ளிவைப்பு
வா வாத்தியார் திரைப்படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் முதலில் இந்த மாதம் 5-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் டிசம்பர் 12-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, அதற்கான புரமோஷன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக இறங்கியது. ஆனால் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், டிசம்பர் 12-ந் தேதியும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை.
34
வா வாத்தியார் படத்துக்கு சிக்கல்
வா வாத்தியார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இம்மாதமே இருமுறை தள்ளிப்போனதால் இப்படம் இனி ரிலீஸ் ஆகுமா என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அதற்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஏனெனில் அப்படக்குழு அமேசான் பிரைம் நிறுவனத்துடன் ஓடிடி டீலிங் போட்டுள்ளது. அதன்படி இந்த மாதத்திற்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஒருவேளை செய்யாவிட்டால் டீலிங் கேன்சல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் படக்குழுவினர் வா வாத்தியார் திரைப்படத்தை வருகிற டிசம்பர் 24-ந் தேதி அல்லது ஜனவரி 17ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ஏனெனில் இந்த இரு தினங்களில் டிசம்பர் 24 எம்.ஜி.ஆர் மறைவு நாள், ஜனவரி 17ந் தேதி, எம்ஜிஆர் பிறந்தநாள் என்பதால், அது இப்படத்துக்கும் ஒரு பூஸ்ட் ஆக அமைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இப்படம் முழுக்க எம்ஜிஆர் ரெபரன்ஸ் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் நிதி பிரச்சனைகளை டிசம்பர் 24-ந் தேதிக்குள் முடித்துவிட்டால் படத்தை அன்றைய தினம் திரைக்கு கொண்டு வருவார்கள். அது நடக்கவில்லை என்றால் ஜனவரி 17-ந் தேதி தான். அந்த தேதியிலாவது இப்படம் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.