சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் டிசம்பர் 12ந் தேதி ரிலீஸ் ஆன நிலையில், அப்படம் முதல் மூன்று நாட்களில் எவ்வளவு வசூலை வாரிக்குவித்து உள்ளது என்பதை பார்க்கலாம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் படையப்பா. பக்கா கமர்ஷியல் படமான இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பக்கா ட்ரீட் ஆக அமைந்திருந்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக செளந்தர்யாவும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அதை கொண்டாடும் விதமாக படையப்பா படத்தை இந்த ஆண்டு ரஜினி, பிறந்தநாள் அன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்தனர்.
24
படையப்பாவிற்கு அமோக வரவேற்பு
படையப்பா திரைப்படம் ரஜினி தன்னுடைய நண்பர்களை வைத்து தயாரித்த படம் என்பதால், அப்படத்தை அவர் இதுவரை எந்த ஓடிடி தளத்துக்கும் கொடுக்கவில்லை. இதனால் 2கே கிட்ஸுக்கு படையப்பா படத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கும் இப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்பதை கருத்தில் கொண்டு அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் பெரியளவில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாததால், தமிழ்நாடு முழுக்க அதிகப்படியான திரையரங்குகளை படையப்பா திரைப்படம் ஆக்கிரமித்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.
34
படையப்பா மீம்ஸ்
படையப்பா திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து அப்படம் தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. குறிப்பாக படையப்பா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கர்ப்பனையோடு, டியூட் படத்தின் பாடல்களை படையப்பா படத்தோடு எடிட் செய்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஒருசிலரோ ஜென் Z கிட்ஸ் படையப்பா படம் பார்த்தால் என்ன விமர்சனம் கொடுப்பார் என்று கர்ப்பனை கலந்த விமர்சனத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், படையப்பா திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.14.8 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாம். இந்த வாரம் வெளிவந்த புதுப்படங்கள் ஒன்று கூட படையப்பா ரீ-ரிலீஸ் வசூலுக்கு கிட்ட கூட நெருங்க முடியவில்லை. இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் சிங்கம் போல் சிங்கிளாக வசூல் வேட்டையாடி அதகளம் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படம் கில்லி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூலான 32 கோடியை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.