சமீபத்தில் ஓடிடியில் வெளியான சிறந்த 5 திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில் த்ரில்லர் படங்களுடன், கணவன் மனைவி தவறவிடக்கூடாத ஒரு படமும் உள்ளது.
வீட்டிலிருந்தே படம் பார்க்க விரும்புவோருக்கு ஓடிடி சிறந்த பொழுதுபோக்கு தளம். சமீபத்தில் வெளியான சிறந்த 5 ஓடிடி திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த படங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு சூப்பர் அனுபவத்தை கொடுக்கும்.
26
1.ஆண் பாவம் பொல்லாதது
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்த இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது. கணவன் மனைவி உறவின் சிக்கல்களை நகைச்சுவையுடன் கூறும் இந்த படத்தை தம்பதிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
36
2. ஸ்டீஃபன்
ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் இது. தொடர் கொலைகள் செய்யும் ஒருவன் போலீசில் சரணடைகிறான். அவனது அதிர்ச்சியூட்டும் பின்னணி என்ன என்பதே கதை. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.
ப்ரீ-வெட்டிங் ஷூட்டால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம் தான் இந்த .தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ இதில் திருவீர், டீனா ஸ்ராவ்யா நடித்துள்ளனர். இந்த படம் ஜீ 5-ல் காணக்கிடைக்கிறது.
56
4. தி கேர்ள் பிரண்ட்
ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த படம் காதலில் ஏற்படும் சிக்கல்களை பேசுகிறது. காதலர்களுக்குள் ஏற்படும் மோதலும், அதன் பின்னணியும் கதை. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது. இப்படத்தை ராகுல் இயக்கி உள்ளார்.
66
5. குற்றம் புரிந்தவன்
ஒரு புலனாய்வு த்ரில்லர் வெப் சீரிஸ் தான் இந்த குற்றம் புரிந்தவன். மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இது, இருக்கை நுனியில் அமர வைக்கும். இந்த சீரிஸ் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. நல்ல டைம் பாஸ்.