ஃபால் அவுட் சீசன் 2
அணு ஆயுத அழிவுக்குப் பிறகு மோஜாவே பாலைவனத்தில் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் அரசியல் சதித்திட்டங்களைக் கொண்ட சர்வதேச சூப்பர்ஹிட் சீரிஸ். டிசம்பர் 17 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் சீசன் 4
நான்கு நண்பர்களின் வாழ்க்கையின் இறுதி அத்தியாயமாக வரும் உணர்ச்சிகரமான ஃபைனல் சீசன். அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் டிசம்பர் 19 முதல் வெளியாகிறது.
தம்மா
ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'தம்மா' ஒரு ஹாரர் காமெடிப் படம். தற்போது பிரைம் வீடியோவில் வாடகைக்குக் கிடைக்கும் இப்படம், 16 ஆம் தேதி முதல் இலவசமாகக் கிடைக்கும்.
ராஜு வெட்ஸ் ராம்பாய்
சிறிய படமாக வெளியாகி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய 'ராஜு வெட்ஸ் ராம்பாய்' டிசம்பர் 18 அன்று ஈடிவி வின் தளத்தில் வெளியாகிறது.
உன் பார்வையில்
கபிர் லால் இயக்கத்தில் பார்வதி நாயர், கணேஷ் வெங்கட்ராமன், மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள உன் பார்வையில் திரைப்படம் வருகிற டிசம்பர் 19-ந் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.