பிரதமரை வரவேற்க சென்ற சிவாஜி மகனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... நெகிழ்ந்து போன ராம்குமார்...!

First Published | Feb 15, 2021, 10:44 AM IST

பிரதமர் மோடியை வரவேற்க சென்ற சிவாஜி கணேசனின் மூத்த மகனும், சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவருமான ராம்குமாருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 8 ஆயிரத்து 126 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரத பிரதமர் மோடி நேற்று சென்னை வந்திருந்தார். இதனால் சென்னை முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு கடற்படை தளத்திற்கு வந்திறங்கினார்.
அங்கு பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.
Tap to resize

அவர்களுடன் பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன், கட்சி நிர்வாகி எச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக குஷ்பு உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமார் சென்னை விமான நிலையில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சென்றார். அப்போது பிரதமரை நோக்கி வணக்கம் தெரிவித்து வரவேற்ற ராம்குமாரை பார்த்து பிரதமர் மோடி அவர்கள், ன்னிடம் இசைக்குயில் தீதீ லதா மங்கேஷ்கர் அவர்கள் என் சகோதரர் சிவாஜியின் புதல்வர் ராம்குமார் தங்களை வரவேற்க காத்திருக்கிறார் என சொன்னதாக ராம்குமாரின் தோளில் அன்புடன் தட்டிக்கொடுத்தப்படி இந்தியில் கூறினாராம்.
தன்னுடைய தந்தையைப் பற்றி பிரதமர் மோடி பேசியதைக் கேட்டு ராம்குமார் நெகிழ்ந்து போயிருக்கிறார். நான் பிரதமர் மோடியின் ரசிகன், அவரின் செயல்பாடுகளை பல ஆண்டுகளாக கவனித்து, அதில் ஈர்க்கப்பட்டே பாஜகவில் இணைய முடிவெடுத்தேன் என ராம்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர். இதனால் மிக்க மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நன்றி சென்னை! அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.

Latest Videos

click me!