தனியா வரச்சொன்னார்; என்ன பார்த்ததும் வேர்த்து கொட்டீருச்சு - வைரமுத்துவின் லீலைகளை அவிழ்த்துவிட்ட சுசித்ரா

Published : Sep 15, 2024, 08:51 AM ISTUpdated : Sep 18, 2024, 07:38 PM IST

Suchitra allegations against Vairamuthu : பாடலாசிரியர் வைரமுத்து தன்னை வீட்டுக்கு தனியாக அழைத்ததாகவும் அதன்பின் நடந்த சம்பவம் பற்றியும் பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
15
தனியா வரச்சொன்னார்; என்ன பார்த்ததும் வேர்த்து கொட்டீருச்சு - வைரமுத்துவின் லீலைகளை அவிழ்த்துவிட்ட சுசித்ரா
suchitra, Vairamuthu

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான குரலால் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர் சுசித்ரா. விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பாடி உச்சத்தில் இருந்த சுசித்ரா, கடந்த 2016-ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்கிற விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமானார். பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்ததால் ஆள் அட்ரஸே தெரியாமால் காணாமல் போனார் சுச்சி.

சில ஆண்டுகள் கப்சிப்னு இருந்த சுசித்ரா, கடந்த சில மாதங்களாக யூடியூப்பில் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றியும், பிரபலங்களின் போதை பார்ட்டிகள் பற்றியும் ஓப்பனாக பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார் சுச்சி. அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்துவின் லீலைகளை பேட்டி ஒன்றில் கட்டவிழ்த்துவிட்டுள்ளார் சுசித்ரா. அந்த பேட்டி இணையத்தில் வைரலாகிறது.

25
Singer Suchitra

அதில் அவர் கூறியதாவது : “வைரமுத்து எல்லா பாடகிகளுக்கும் போன் பண்ணி தப்பு தப்பா தான் பேசுவார். அவர் சொல்லும் டயலாக்கையும் நான் சொல்கிறேன். என்னிடமே ‘அம்மா உங்க வாய்ஸுல ஒரு காமம் இருக்கும்மா... உங்க வாய்ஸ கேட்டு நான் பைத்தியம் ஆகிட்டேம்மா.. உங்க வாய்ஸ் மேல ஒரு காதல் ஏற்படுதும்மா’ அப்படினு சொல்லுவார். இதுதான் அவருடைய டயலாக். இந்த மாதிரி போன் கால் வராத பாடகிகளே இருக்க முடியாது.

ஜேஜே படத்தில் இடம்பெற்ற மே மாசம் 98-ல் பாடலை நான் தான் பாடி இருந்தேன். அப்போ போன் போட்டு, உங்க வாய்ஸ்ல காதல் இருக்குனு சொல்றாரு. கேவலமான பாட்டு அது. அந்த பாட்டை கேட்டா எவனுக்கு காதல் வரும். டிவில பார்த்தா ரீமா சென் மேல வேணா காதல் வரலாம். அந்தப் பாடலை நான் ஒரு படபடப்போட தான் பாடினேன். ரொம்ப ஹை பிட்ச் பாட்டு வேற, பயந்து பயந்து பாடினேன். எக்ஸ்பிரஷனே இல்லாம இருக்கும் அந்த பாடல்.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்தபடி... இசைக்கருவிகள் இன்றி இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாட்டு - அடடே இதுவா?

35
Suchi Leaks Suchitra

அதுமட்டுமின்றி வீட்டுக்கு வாம்மா உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும்னு சொன்னாரு. நான் தனியாக செல்லாமல் என்னுடைய பாட்டியையும் உடன் அழைத்து சென்றிருந்தேன். நான் பாட்டியுடன் வருவதை பார்த்து ஷாக் ஆன வைரமுத்து, நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன்னு சொன்னார். நான் எங்க போனாலும் என் பாட்டியோடு தான் செல்வேன் என சொன்னேன். அவரிடம் என்னுடைய பாட்டி தான் நிறைய பேசுனாங்க.

நீங்கெல்லாம் தான் இந்த மாதிரி இளம் பாடகிகளை வளர்த்துவிட வேண்டும். நீங்க பொறுப்பா இருங்க. இந்த பொண்ணுக்கு நீங்க அப்பா மாதிரினு அவரிடம் அழுத்தம் திருத்தமாக பேசினார் என் பாட்டி. அவர் பேசியதைக் கேட்டதும் வைரமுத்துக்கு வேர்த்து ஊத்திடுச்சு. பின்னர் ஏதோ பரிசு கொடுக்கனும்னு சொன்னீங்களாமேனு என் பாட்டி கேட்டாங்க. 

45
Suchitra allegations against Vairamuthu

அந்த ஆள் பரிசுக்கு ரெடியே இல்ல, தொடுறதுக்காக தான் என்னை கூப்பிட்டாரு. என் பாட்டி பரிசுனு கேட்டதும் பதறிவிட்டார். அதன்பின்னர் ஏதாச்சு கொடுக்கனுமேனு வீட்டுக்குள் சென்று 2 ஷாம்பூ பாட்டிலை எடுத்து கொடுத்தார். இதுதான் வைரமுத்துவின் கேரக்டர். அதுக்கப்புறமும் எனக்கு கால் வரும். வைரமுத்து சார் கம்போசிங்கிற்காக உங்களை பண்ணை வீட்டுக்கு கூப்பிடுகிறார் என்று சொல்வார்கள்.

அப்படியானு சொன்னதும், லைன்ல இருங்க நாங்க வைரமுத்து சாருக்கு கனெக்ட் பண்றோம்னு சொல்லுவாங்க. நான் உடனே போனை வைத்துவிடுவேன். 

55
vairamuthu

திரும்ப திரும்ப அழைப்பார்கள். அப்போதும் இவ்வாறு செய்வேன். அவங்களே டயர்டு ஆகிடுவாங்க. இப்படி அவங்கள பைத்தியமாக்கனும். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேற வழியே இல்ல. 

வயது வித்தியாசமெல்லாம் பார்க்க மாட்டார்களா என்று தொகுப்பாளர் கேட்க, அய்யோ அவங்கெல்லாம் லஸ்ட் ஃபெளோஸ். அவங்கெல்லாம் அப்படி தான் இருப்பார்கள். அந்த மாதிரி இருப்பவர்கள் எல்லாம் சாகுற வரைக்கும் அப்படிதான் இருப்பார்கள்” என்று சுசித்ரா பேசி இருக்கிறார். வைரமுத்துவை தாக்கி சுசித்ரா பேசி இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சிரஞ்சீவி வாழ்க்கையையே திருப்பி போட இருந்த சம்பவம்! மெகா ஸ்டார் திருமண விஷயத்தில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்?

click me!

Recommended Stories