மருத்துவமனையில் இருந்தபடி... இசைக்கருவிகள் இன்றி இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாட்டு - அடடே இதுவா?

Published : Sep 15, 2024, 07:52 AM IST

Ilaiyaraaja Song Secret : இசைஞானி இளையராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் இசைக்கருவிகளே இல்லாமல் இசையமைத்த பாடல் பற்றி பார்க்கலாம்.

PREV
15
மருத்துவமனையில் இருந்தபடி... இசைக்கருவிகள் இன்றி இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாட்டு - அடடே இதுவா?
Ilaiyaraaja

1980களில் இசைஞானி இளையராஜா தன்னுடைய இசை ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. திரும்பிய பக்கமெல்லாம் ஹிட் பாடல்களை கொடுத்து ராஜா கோலோச்சி வந்த காலகட்டத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாடல் அவசரமாக வேண்டும் என கேட்க, உடனே மருத்துவமனையில் இருந்தபடியே இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். அந்த பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அந்த பாடல் பற்றி பார்க்கலாம்.

25
Isaignani Ilaiyaraaja

1984-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவுக்கு ஹெர்னியா ஆபரேஷன் நடந்திருக்கிறது. அப்போது பெட் ரெஸ்டில் இருந்தார் இளையராஜா. அவரை ஒரு மாதத்திற்கு பாட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அப்போது தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இசைஞானியை பார்க்க வந்து, தான் தயாரிக்கும் படம் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், பாடல் ஷூட்டிங்கிற்காக ரஜினி காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

35
Ilaiyaraaja Song Secret

டாக்டர் பாடக்கூடாது என்று சொல்லியிருக்காரே இந்த நேரத்தில் எப்படி கம்போஸ் செய்வது என்று இளையராஜா தயங்கினாலும் பஞ்சு அருணாச்சலத்தின் நிலையை புரிந்துகொண்டு அவரிடம் பாடலுக்கான சூழல் என்ன என கேட்டிருக்கிறார். உடனே காதல் தோல்வி பற்றிய பாடல் என்று சொன்னதும், சரி டாக்டர் என்னை பாடக்கூடாது என்று தான் சொல்லி இருக்கிறார். விசில் அடிக்க கூடாது என்று சொல்லவில்லை. அதனால் நான் விசிலிலேயே ட்யூன் போடுகிறேன் என சொல்லி இருக்கிறார் இளையராஜா.

இதையும் படியுங்கள்... "ரொம்ப டாமினேட் பன்றாங்க" பிரபல பெண் ஆங்கரால் CWCல் இருந்து விலகிய மணிமேகலை - ஷாக்கிங் இன்ஸ்டா பதிவு!

45
SPB, Ilaiyaraaja

உடனே அந்த ட்யூனை விசிலாக இளையராஜா சொல்லச் சொல்ல பஞ்சு அருணாச்சலம் அதற்கான பாடல் வரிகளையும் எழுதி இருக்கிறார். பின்னர் படுத்த படுக்கையா இருக்கியே, இதை எப்படி ரெக்கார்டிங் பண்ணுவ என பஞ்சு அருணாச்சலம் கேட்க, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூலாக சொல்லி இருக்கிறார் இளையராஜா. பின்னர் மறுநாள் தன்னுடைய உதவியாளர்களை வரச்சொல்லிவிட்டு, மியூசிக் நோட்ஸுகளை எழுதி கையில் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

55
Kaathalin Deepam Ondru Song

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்த பாடலை பாட ஸ்டூடியோக்கு வரும்போது அவரிடம் பாடச் சொல்லிக் கொடுத்துவிட்டு தொலைபேசியில் என்னை அழையுங்கள் என சொல்லி இருக்கிறார் இளையராஜா. அவர் போனிலேயே பாடிக்காட்ட, இளையராஜா அதை போனிலேயே கரெக்ட் செய்திருக்கிறார். அப்படி அவர் மியூசிக் ஸ்டூடியோ செல்லாமல் இசையமைத்த பாடல் இதுதானாம்.

அது வேறு எந்த பாட்டும் இல்லை... ரஜினியின் தம்பிக்கு என்ன ஊரு படத்தில் இடம்பெறும் காதலின் தீபம் ஒன்று பாடல் தான். இப்பாடலை தான் மருத்துவமனையில் இருந்தபடியே கம்போஸ் செய்து முடித்திருக்கிறார் இளையராஜா. அப்படி கம்போஸ் பண்ணிய இந்த பாட்டும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது என்றால் ராஜா எனும் ஜீனியஸ் தான் முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்... லதா மங்கேஸ்கரே பாடுவது கஷ்டம்னு சொன்ன பாட்டு.. தமிழ் பாடகியை வைத்து மாஸ் காட்டிய MSV - எந்த பாடல் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories