chinmayi sripada
பாடகி சின்மயீ புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தியைப் பகிர்ந்த ஒரு நாள் கழித்து, இன்ஸ்டாகிராம் பாடகி சின்மயியின் சரிபார்க்கப்பட்ட கணக்கை இடைநிறுத்தியுள்ளது. பின்னர் பாடகி, ஒரு காப்புப் பிரதி கணக்கை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் அவர் சிறிது காலமாக தனது உள்ளடக்கத்தை இடுகையிடத் தொடங்கினார்.
chinmayi sripada
முன்னதாக கடந்த ஜூன் 21-ந் தேதி பாடகி சின்மயிக்கு குழந்தை பிறந்தது. இரட்டைக் குழந்தைகள் பெயருடன் சின்மயீ இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிடாமல் வைத்திருந்த்து குறித்து கேள்வி எழுப்பியதோடு, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? போன்ற கேள்விகளை எழுப்பி கடுப்பேத்தி வந்தனர். எல்லாவற்றையும் மிஞ்சி தற்போது இவ்வாறு அநாகரிகமாக நடித்து கொண்டுள்ளது நெட்டிசன்கள் குறித்த அதிருப்தியையும் சமூக வலைத்தளம் குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சின்மயீ கவிஞர் வைரமுத்து குறித்து மீடூ புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு... Anirudh : அந்த ஒரு காரணத்தால் தான் ஆண்ட்ரியா உடனான காதல் தோல்வியில் முடிந்தது... ஓப்பனாக சொன்ன அனிருத்