மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மம்தா மோகன்தாஸ். இவர் நடிகையாக மட்டுமின்றி பாடகி, தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். இவர் முறையாக கர்நாடக் இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றைக் கற்றுக் கொண்டுள்ளார்.
இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட மம்தா, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஓராண்டிலேயே விவாகரத்து செய்துவிட்டார்.
விவாகரத்துக்கு பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மம்தா, அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்தார். இதேபோல் தமிழில் கடந்தாண்டு விஷால் நடிப்பில் வெளியான எனிமி படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் மம்தா.
தற்போது 37 வயதாகும் மம்தா, சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆகிடிவாக இருக்கும் அவர் அதில் தொடர்ந்து தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களையும், தன்னுடைய சுற்றுலா புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சினிமா நடிகர், நடிகைகளின் கனவு தேசமான மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் மம்தா. அங்கு சென்றது நடிகைகள் செய்யும் அதே பார்முலாவை தான் மம்தாவும் பின்பற்றி உள்ளார். அது வேறொன்றும் இல்லை பிகினி போட்டோஷூட் தான்.
கையில் சரக்கு கிளாஸ் ஒன்றை வைத்துக்கொண்டு கடற்கரையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து நடிகை மம்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.