நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணமானது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தனுஷின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்தது. ரசிகர்கள் அனைவரும் ஏன் இந்த முடிவு, தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒரு காரணம் சிம்பு என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படங்களை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சவுந்தர்யா, சிம்புவுக்கு வாழ்த்து சொன்னதுதான் ரஜினி வீட்டில் வீசிய புயலுக்கு காரணம் என்று நெட்டிசன்கள் முணுமுணுக்கிறார்கள். ஏனெனில் சிம்புவும் தனுஷும் திரையுலகில் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். அதனால் சவுந்தர்யாவின் வாழ்த்து தனுஷை வெறுப்படைய வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இது வெறும் வதந்தி என்றும் சிம்புவுக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சிம்பு ரசிகர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதாகி வருவதால், நடிகர் தனுஷ் விரைவில் இதுகுறித்து விளக்கம் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.