Dhanush Divorce : உடைந்து அழுத ரஜினி.... தனிமையை தேடி எங்கே போனார்?

Published : Jan 18, 2022, 12:13 PM ISTUpdated : Jan 18, 2022, 12:43 PM IST

பெயர், புகழ், சொத்து, சுகமெல்லாம் சேர்த்ததற்கு பின்னரும், மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர்ஸ்டாருக்கு வந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

PREV
15
Dhanush Divorce : உடைந்து அழுத ரஜினி.... தனிமையை தேடி எங்கே போனார்?

அண்ணாமலை படத்தில் இடம்பெறும் ‘ஒரு பெண் புறா... கண்ணீரில் தள்ளாட, என் வாழ்க்கை திண்டாட’ என்கிற பாடல் போன்று தான் ரஜினியின் தற்போதைய மனநிலை உள்ளது. சமூக வலைதளத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பேச்சு தான். 

25

நடிகர் ரஜினி, தான் நினைத்தபடி தனது முதல் மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் போனதால், இளைய மகள் சவுந்தர்யாவை தனது சமூகத்தை சேர்ந்தவருக்கே திருமணம் செய்து வைத்தார். இந்த உறவு 7 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சவுந்தர்யா.

35

மகளின் விவாகரத்துக்கு பின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி, கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் என்பவரை சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த பின்னர் தான் நிம்மதி ஆனார். இந்த நிலையில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தற்போது விவாகரத்து செய்துள்ளதால், மனமுடைந்த நடிகர் ரஜினி கடும் அப்செட்டில் இருக்கிறாராம். நேற்று இரவு தான் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பு வந்தது. 

45

நேற்று காலையில் இருந்தே ரஜினி வீட்டில் இல்லையாம். அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டதாக ஊடகத்தினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு சென்றதற்கான உண்மையான காரணம் மகளின் விவாகரத்து முடிவுதானாம். அவர் எங்கு போனார் என்கிற விவரம் வெளியாகவில்லை. 

55

தனிமையை தேடி எங்கோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எவ்ளவோ பெயர், புகழ், சொத்து, சுகமெல்லாம் சேர்த்ததற்கு பின்னரும், மன நிம்மதி இல்லாத நிலை சூப்பர்ஸ்டாருக்கு வந்துவிட்டதே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories