வீணா போனவன் டான் ஆன கதைனு விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்... சக்சஸ் மீட்டில் தரமான பதிலடி கொடுத்த சிம்பு

First Published | Sep 19, 2022, 9:19 AM IST

Simbu : ஒரு படத்தை விமர்சனம் பண்லாம், தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீசான படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் இப்படத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தனர். வீணா போனவன் டான் ஆன கதைனு சொல்லி விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன்.

அதுமட்டுமின்றி, கவுதம் மேனன், படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள், படம் பார்க்க வருபவர்கள் நன்கு தூங்கிவிட்டு வாருங்கள் என கூறி இருந்தார். அவர் அப்படி சொல்லும் போதே கருகுற வாடை அடித்ததாக கிண்டலடித்து இருந்தார் ப்ளூ சட்டை, அதுமட்டுமின்றி கவுதம் மேனனை வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்றும் தரக்குறைவாக பேசி இருந்தார். இதற்கு நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...

Tap to resize

ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்திற்கு சென்னையில் நேற்று நடந்த சக்சஸ் மீட்டில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் பதிலடி கொடுத்தனர். இன்னொருத்தர் பொழப்புல மண்ணு போடுறது தான் விமர்சனங்களா என தான் பலமுறை யோசித்தது உண்டு என இயக்குனர் கவுதம் மேனன் பேச, சிம்பு உருவகேலி குறித்து பேசினார்.

சிம்பு கூறியதாவது : “வெந்து தணிந்தது காடு படத்துல என்னோட உடம்ப வச்சு விமர்சகர்களால் எதுவும் எழுத முடியல. ஒரு படத்தை விமர்சனம் பண்லாம், தனிப்பட்ட மனிதனையும், அவனுடைய உருவத்தையும் விமர்சனம் பண்றது ரொம்ப தப்பு. என்னால எடுத்துக்க முடியும் நிறைய பேரால எடுத்துக்க முடியாது. தனிப்பட்ட முறையில் யாரையும் துன்புறுத்த வேண்டாம். இதை நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன். இவ்வாறு ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்

Latest Videos

click me!