பாலிவுட்திரையுலகின் மூலம் நடிகை சனா கான் அறிமுகமாக இருந்தாலும், தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான, ஈ படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'சிலம்பாட்டம்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த சிம்புவில், மகன் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இதுவே தமிழில் ஹீரோயினாக இவர் நடித்த முதல் படமாகும்.
Sana Khan
மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ள இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், முற்றிலும் திரையுலகில் இருந்து விலகிய சனா கான் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அவருடைய தொழிலையே கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கர்ப்பமாக இருந்த சனா கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில், சனா கான் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், எங்கள் குழந்தைக்காக அல்லாஹ் எங்களை சிறந்தவர்களாக மாற்றுவாராக. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு நல்லதையே செய்வாராக என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சனா கானுக்கும் அவரின் கணவருக்கும் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.