மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
25
அதிக சம்பளம் வாங்கிய சிம்பு
தக் லைஃப் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது சிம்பு தான். அவருக்கு இப்படத்தில் நடிக்க ரூ.40 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய கெரியரில் அவர் அதிக சம்பளம் வாங்கிய படமும் இதுதான். இப்படத்தில் கமலுக்கு நிகராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
35
திரிஷா சம்பளம் எவ்வளவு?
தக் லைஃப் படத்தில் நாயகியாக நடித்துள்ள திரிஷா ரூ.12 கோடி சம்பள்மாக வாங்கி உள்ளாராம். அவர் இப்படத்தில் இந்திராணி என்கிற பாடகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரிஷாவின் கதாபாத்திரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் கமலுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்துள்ளார் திரிஷா.
தக் லைஃப் படத்தின் தூணாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவருக்குமே இப்படத்தில் சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளனர். ஏனெனில் அவர்கள் இருவரும் இணைந்து தான் இப்படத்தை தயாரித்து உள்ளனர். இப்படத்தில் இருந்து வரும் லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ள உள்ளனர். தக் லைஃப் படம் ரிலீசுக்கு முன்பே நன்கு லாபம் பார்த்துவிட்டதாக கூறப்படுவதால், அவர்களுக்கு இப்படம் மூலம் பெரும் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
55
மற்ற நடிகர், நடிகைகள் சம்பளம்
தக் லைஃப் படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அதேபோல் இப்படத்தில் நடிகர் கமலின் மனைவியாக நடித்துள்ள அபிராமி ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளாராம். இதுதவிர நடிகர் அசோக் செல்வனும் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.