Bharathiraja : பாரதிராஜா கையில் தூக்கி வைத்திருக்கும் சுட்டிப் பையன் யார் தெரியுதா? இப்போ கோலிவுட் அரசனே இவர் தான்..!

Published : Jun 11, 2026, 01:28 PM IST

Director Bharathiraja Viral Photo : தற்போது டாப் ஹீரோவாக வலம் வரும் நடிகர் ஒருவர் சிறுவயதில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
15
Bharathiraja Vintage Photos

இயக்குநர் இமயம் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் முகத்தையே மாற்றியவர் என்றே சொல்லலாம். ஏனெனில் 1980களில் செட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி நகர்த்திச் சென்றவர் பாரதிராஜா. மண்வாசணையையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் திரையில் அழகாக காட்டி, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தினார் பாரதிராஜா. 16 வயதினிலே என்கிற தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருந்தார் பாரதிராஜா.

25
பாரதிராஜா மறைவு

பாரதிராஜாவின் படங்களில் பெண்களின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர் அறிமுகம் செய்து வைத்த நடிகைகள் பலர், பின்னாளில் ஸ்டார் ஹீரோயின்களாக உயர்ந்துவிட்டார்கள். 6 தேசிய விருதுகள் வென்றுள்ள பாரதிராஜா, சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். இவரைப்பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த இயக்குநர்கள் பலர். இன்றும் பல இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடலாக திகழ்ந்து வருகிறார் பாரதிராஜா. அத்தகைய பெருமைமிகு கலைஞன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

35
பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை

பாரதிராஜா உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான அல்லிநகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊர் மக்கள், உறவினர்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இன்று பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாரதிராஜா மறைவுக்கு நேரில் வர முடியாத பிரபலங்கள் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.

45
பாரதிராஜா கையில் இருக்கும் சிறுவன் யார்?

அப்படி பாரதிராஜா உடன் தான் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, பிரபல நடிகர் ஒருவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் பாரதிராஜா, அந்த நடிகரை கையில் தூக்கி வைத்திருக்கிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறுயாருமில்லை சிம்பு தான். சிம்பு சிறுவயதில் ஒரு விழாவில் தன் தந்தையுடன் கலந்துகொண்டபோது, அவரை தன் கையில் தூக்கிவைத்து கொஞ்சி விளையாடி இருக்கிறார் பாரதிராஜா. அப்போது எடுத்த புகைப்படம் தான் இது.

55
சிம்பு நெகிழ்ச்சி

இதையடுத்து கொரோனா காலகட்டத்தில் படமாக்கப்பட்ட ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு உடன் இணைந்து நடித்திருந்தார் பாரதிராஜா. அப்படத்தில் சிம்புவின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் ஷூட்டிங்கில் பாரதிராஜா சேரில் அமர்ந்திருக்க, அவர் அருகே சிம்பு அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் சிம்பு பதிவிட்டுள்ளார். அவருடன் பணியாற்றிய தருணங்களை என்றென்றும் நினைவு கொள்வேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சிம்பு. இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories