Published : Jul 24, 2022, 12:11 PM ISTUpdated : Jul 24, 2022, 12:12 PM IST
Mahaa movie boxoffice collection : காதல் முறிவுக்கு பின் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம் என்பதால், மஹாவிற்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ஆரம்பகாலகட்டத்தில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார். இதையடுத்து உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. பின்னர் சட்டென உடல் எடையை குறைத்து ஸ்லிம் பேபி ஆன ஹன்சிகா தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
24
அந்த வகையில் அவரது 50-வது படமான மஹா சமீபத்தில் ரிலீஸ் ஆனது. கடந்த ஜூலை 22-ந் தேதி ரிலீசான இப்படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலனான சிம்புவும் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஜமீல் என்பவர் இயக்கி இருக்கிறார். காதல் முறிவுக்கு பின் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்து நடித்த முதல் படம் இதுவாகும்.
இப்படத்திற்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் ரூ.1 கோடி கூட வசூலிக்கவில்லையாம். சிம்பு போன்ற முன்னணி நடிகர் நடித்திருந்தும் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது படக்குழுவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
44
இப்படமும் விறுவிறுப்பாக இல்லை என்றே விமர்சனங்களும் வருகிறது. இதனால் போட்ட முதல் வருமா என்கிற கலக்கத்தில் உள்ளதாம் தயாரிப்பு தரப்பு. இருப்பினும் சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களிலாவது வசூல் அதிகரிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.