தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் படங்கள் அதிகளவில் வந்தாலும், அவ்வப்போது ஃபீல் குட் படங்களை தவறாமல் கொடுத்து வருகிறது கோலிவுட். கடந்த 2023-ம் ஆண்டு குட் நைட் என்கிற ஃபீல் குட் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், கடந்த ஆண்டு லப்பர் பந்து திரைப்படம் ஒரு ஃபீல் குட் படமாக வந்து வசூல் வேட்டை ஆடியது. அதேபோல் இந்த ஆண்டும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒரு ஃபீல் குட் படமாக வெளியாகி தற்போது திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறாது.
24
ஸ்ரீகணேஷ் இயக்கிய 3BHK
இந்த வரிசையில் அடுத்ததாக இணைய உள்ள படம் தான் 3BHK. இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சித்தார்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தேவையானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்து உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
34
3BHK படத்தில் ஜோடியாக நடித்துள்ள சரத்குமார் - தேவையானி
3BHK திரைப்படம் ஒரு மிடில் கிளாஸ் பேமிலியை பற்றியது. அவர்களின் சொந்த வீட்டு கனவு நனவானதா என்பதைப் பற்றிய ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக 3BHK உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை எஸ்.பி.சுப்பையா கைப்பற்றி உள்ளார். இப்படத்தில் நடிகர் சரத்குமாரும், தேவையானியும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். சூரியவம்சம் படத்துக்கு பின் அவர்கள் இருவரும் இணையும் படம் இதுவாகும். அவர்களின் மகனாக நடிகர் சித்தார்த் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், 3BHK திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி ஜூலை 4ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் பாதியில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஒரு ஃபீல் குட் படமாக வந்து கவனம் ஈர்த்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 3BHK திரைப்படம் அந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.