நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையைப் போல் பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்ருதி, பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதுதவிர பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ருதி. இந்நிலையில், அவர் தனது முதுகில் புதிதாக டாட்டூ ஒன்றை குத்தி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த டாட்டூ குத்திக்கொண்டதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
அதன்படி அவர் தனது முதுகில் ஏற்கனவே தமிழில் ‘ஷ்ருதி’ என டாட்டூ குத்தி இருந்த நிலையில், தற்போது அதன்மேல் முருகனின் வேல்-ஐ டாட்டூவாக குத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “எப்போதுமே நான் கடவுள் நம்பிக்கை உள்ள நபர் தான். முருகனுக்கு என் இதயத்தில் ஸ்பெஷலான இடம் இருக்கிறது. அதை வெளிக்காட்டவே இந்த டாட்டூவை குத்தியுள்ளேன். நான் எப்போதும் கடவுள் பக்தியுடன் இருக்கின்றேன். இந்த டாட்டூ எனக்கு அதிக சக்தியை அளிப்பதோடு, பாதுகாப்புடனும், அடக்கத்துடனும் இருக்க வேண்டும் என ஞாபகப்படுத்துவதாக ஸ்ருதி ஹாசன்” தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அப்போ லிப்கிஸ்... இப்போ டேட்டிங்! விஜய்யுடன் நெருக்கம் காட்டும் தமன்னா - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ