அதில் "எனக்கு மிகவும் பிடித்தமான நபரும், அற்புதமான அப்பாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எளிதாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் அறிவுரைகளுக்கு நன்றி. எனக்குப் பிடித்த குக்கீஸ் மற்றும் தின்பண்டங்களை இப்போதும் நீங்களே கொண்டு வந்து தரும் அன்பான அப்பாவாக இருப்பதற்கு, இசை மற்றும் சினிமா பற்றி பேசவும் பாடவும் நீங்களே சிறந்தவர். எல்லாவற்றிலும் என்னை சிரிக்க வைக்கும் ஒரே நபராக இருப்பதற்கு நன்றி," என்று அவர் பதிவில் எழுதியுள்ளார்.
கமல்ஹாசனுக்கு சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, "இந்த பிறந்தநாளில் நீங்கள் தொடர்ந்து கனவு காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... உங்கள் மேஜிக், உங்கள் பிரகாசம் மற்றும் உங்கள் அழகான ஆன்மாவுக்கு இந்த உலகில் எதுவும் ஈடாகாது.. உங்களுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்," என்று மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில், ஸ்ருதி தந்தை-மகள் இருவரும் ஒன்றாகக் கழித்த விலைமதிப்பற்ற தருணங்களின் அழகான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சில கிளிப்களில் கமல்ஹாசன் வேடிக்கையான வீடியோக்கள், இசை நிகழ்ச்சிகள், ஷாப்பிங், செல்ஃபிகள் மற்றும் பலவற்றிற்காக ஸ்ருதியுடன் இணைந்திருக்கும் இயல்பான தருணங்கள் உள்ளன.