சினிமாவில் ஜாம்பவானாக இருக்கும் நடிகர் திருமணத்துக்கு முன்பே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது பெற்றெடுத்த குழந்தை இன்று நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
40 வயதாகும் ஸ்ருதி ஹாசனைப் பற்றிய ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தலாம். ஸ்ருதி, அவரது பெற்றோர் சரிகா மற்றும் கமல்ஹாசனின் திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். உண்மையில், அவரது பெற்றோர் லிவ்-இன் உறவில் இருந்தபோதுதான் சரிகா கர்ப்பமானார்.
26
மகள் பிறந்த பின் திருமணம்
ஸ்ருதி ஹாசனுக்கு 2 வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் 1988-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சரிகாவுக்கு இரண்டாவது மகள் அக்ஷரா பிறந்தார். நீண்ட காலம் ஒன்றாக வாழ்ந்த பிறகு, ஸ்ருதியின் பெற்றோர் 2004-ல் விவாகரத்து செய்தனர்.
36
போலிப் பெயர்
பள்ளியில் படிக்கும்போது போலிப் பெயரைப் பயன்படுத்தியதாக ஸ்ருதி ஹாசன் ஒரு பேட்டியில் கூறினார். திரைப்பட நட்சத்திரங்களின் மகள் என்பதை யாரும் அறிய விரும்பாததே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார். அவர் தனது பெயரை பூஜா ராமச்சந்திரன் என்று வைத்திருந்தார்.
ஸ்ருதி ஹாசன் 1992-ல் 6 வயதில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2000-ல் 'ஹே ராம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். 2009-ல் 'லக்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்தும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
56
கோலிவுட்டில் குவிந்த வாய்ப்பு
இதையடுத்து கோலிவுட்டில் ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், பின்னர் தனுஷுக்கு ஜோடியாக 3, விஜய்யுடன் புலி, அஜித் ஜோடியாக வேதாளம் என தொடர்ச்சியாக டாப் ஹீரோக்களுடன் நடித்தார். இருப்பினும் அப்படங்கள் அவருக்கு கைகொடுக்காததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
66
ஸ்ருதி ஹாசன் கைவசம் உள்ள படங்கள்
தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் கைவசம் ட்ரெயின் மற்றும் சலார் 2 ஆகிய படங்கள் உள்ளன. இதில் ட்ரெயின் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி. மேலும் சலார் 2ம் பாகத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதில் ட்ரெயின் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.