காதலித்து திருமணம் செய்து கொண்ட கமல்ஹாசன் - சரிகா தம்பதி திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே கசந்து போனது. கடந்த 2004-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
46
பெற்றோர் பிரிந்தபோதும் நடிகைகள் சுருதிஹாசனும், அக்ஷராவும் தொடர்ந்து இருவர் மீது அன்பு செலுத்தி வருகின்றனர். எனவே இருவருமே தந்தையை சந்திக்க சென்னைக்கும், அம்மாவை பார்க்க மும்பைக்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் இருக்கும் தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.
66
இந்த புகைப்படத்தில், அன்று அப்படி இருந்த சரிகாவா இது? என அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். உடல் எடை கூடி... ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் உள்ளார் சரிகா. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.