ஆதாரத்தை காட்டுங்க... இல்ல பேசவேண்டாம்..! இயக்குனர் அமீரை வெளுத்தி வாங்கிய மோகன்.ஜி!

First Published Feb 25, 2023, 12:18 PM IST

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய, 'பகாசூரன்' படத்தை பாஜகவிடம் இருந்து பணம் வாங்கி தான் எடுத்ததாக இயக்குனர் அமீர் விமர்சித்த நிலையில், அதற்கான ஆதாரத்தை காட்டும்படி பேட்டி ஒன்றியில் விளாசியுள்ளார் மோகன் ஜி. 
 

தமிழ் சினிமாவில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் மோகன் ஜி. 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், இதைத் தொடர்ந்து இயக்கிய 'ருத்ர தாண்டவம்', 'திரௌபதி', 'பகாசூரன்' ஆகிய படங்களில், பல்வேறு சர்ச்சையான விஷயங்களை அதிரடியாக எடுத்துக் கூறினார்.

அந்த வகையில், இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய 'பகாசூரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் செல்போனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து பல்வேறு பிரச்சனைகளை போல்டாக எடுத்து கூறி இருந்தார் மோகன் ஜி. குறிப்பாக பெண் பிள்ளைகள் ரூமுக்குள் இருக்கும் போது, என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியதோடு, இதனால் ஏற்படும் சில ஆபத்துகளையும் பரபரப்பான காட்சிகளோடு கூறினார்.

கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!
 

இதுபோன்ற காட்சிகளுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த போதிலும், மற்றொரு தரப்பினர் பிற்போக்குத்தனமான கதைக்களத்தில் உள்ளதாக விமர்சனமும் செய்தனர். இந்நிலையில் மோகன் ஜி-யின் 'பகாசூரன்' படத்தை பாஜக கட்சியை சேர்ந்த அண்ணாமலை, எச் ராஜா போன்றவர்கள் பார்த்து விட்டு கருத்து கூறி இருந்தனர். இதனை குறிப்பிட்டு, இயக்குனர் அமீர்... மோகன்ஜி படத்திற்கு விமர்சனம் கூறும் இவர்கள் ஏன் காலா, கபாலி, மெட்ராஸ் போன்ற படங்கள் வெளியான போது கருத்து கூறவில்லை என கேள்வி எழுப்பியதோடு, வட மாநிலங்களில் உள்ள ஆரோக்கியமற்ற நிலமை போல தமிழ்நாட்டையும் மற்றவர்கள் பார்க்கிறார் என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் மோகன் ஜி பாஜகவினரிடம் பணம் வாங்கி தான் இப்படத்தை இயக்கியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக. தற்போது மோகன் ஜி பேட்டி ஒன்றில்...  "ஒரு படத்தை தயாரித்து, திரைக்கு கொண்டு வருவது என்பது எவ்வளவு கடினம் என்று அமீருக்கு நன்றாக தெரியும். படத்தைப் பற்றி அவர் கூறும்போது அது பார்வையாளர்களை பாதிக்கும், படத்திற்கும் பேரிழப்பாக இருக்கும்.  இந்த படத்தை நான் எந்த சர்ச்சையும்  இல்லாமல் தான் உருவாக்கி இருக்கிறேன். எனக்கு பின்னால் இருந்து உதவுவது பாஜக என்றும் அமீர் கூறுகிறார். நான் திரௌபதி படத்தை எடுக்கும்போது ராமதாஸ் மற்றும் எச் வினோத் எனக்கு உதவியாக இருந்தார்கள் எனவே அந்த படத்தை அவர்களுக்கு போட்டுக் காட்டினேன். 

ஸ்ரேயா சரண் முன்னழகை ரசித்து வர்ணித்த ரசிகர்..! எதிர்பாராத வார்த்தையை கூறி ஷாக் கொடுத்த கணவர்!

ஆனால் 'பகாசூரன்' படத்தை பொதுவாகவே சிலருக்கு போட்டு காட்டினேன். அதே போல் பாஜகவினரிடம் இருந்து பணம் வாங்கி தான் இப்படத்தை நான் எடுத்ததாக அமீர் கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இல்லை என்றால் நீங்கள் கூறிய வார்த்தையை திரும்ப பெற வேண்டும் என விலகியுள்ளார் கூறியுள்ளார். இவர்களின் காரசாரமான விவாதம் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!