HCA Awards RRR Movie: சிறந்த பாடல், சிறந்த ஆக்‌ஷன் படம் என்று ஏராளமான விருதுகளை தட்டிச் சென்ற ஆர்ஆர்ஆர் மூவி!

Published : Feb 25, 2023, 11:42 AM IST

கலிபோர்னியாவில் நடந்த ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவின் ஆர்ஆர்ஆர் படம் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது.  

PREV
15
HCA Awards RRR Movie: சிறந்த பாடல், சிறந்த ஆக்‌ஷன் படம் என்று ஏராளமான விருதுகளை தட்டிச் சென்ற ஆர்ஆர்ஆர் மூவி!
ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருது

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை கொடுத்து உலகம் முழுவதும் தன்னை ஒரு பிரம்மாண்ட இயக்குநராக காட்டியவர் இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர் ஆர் ஆர். 
 

25
சிறந்த சர்வதேச திரைப்படம்

கிட்டத்தட்ட ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.1200 கோடி வரையில் வசூல் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. 
 

35
சிறந்த ஸ்டண்ட் காட்சிகள்

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இரு நாயகர்கள் தோன்றியிருந்த இந்த படம் தேசிய போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
 

45
சிறந்த பாடல்

படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்ற பாடலும், பாடலுக்கு ஏற்ப வரும் நடனுமும் சரி உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது. அதுமட்டுமின்றி சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம், சிறந்த பாடல் என்று இரு பிரிவுகளில் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது வென்று சாதனை படைத்தது.
 

55
சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம்

இந்த நிலையில், ஆர்ஆர்ஆர் படம் மேலும் பல பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளது. ஆம், கலிபோர்னியாவில் பெவர்லி ஹில்ஸ் பகுதியிலுள்ள பெவர்லி வில்ஷயர் ஹோட்டலில் நடந்த 6ஆவது ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது, சிறந்த ஆக்‌ஷன் படத்திற்கான விருது, சிறந்த சண்டைக்காட்சிகள் மற்றும் சிறந்த பாடல்கள் (நாட்டு நாட்டு) ஆகிய பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories