தளபதி விஜயின் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், முக்கிய இடங்களில் இப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து இரண்டு படங்களுமே போட்டி போட்டுக் கொண்டு வசூல் சாதனை செய்து வரும் நிலையில், தளபதியின் 'வாரிசு' திரைப்படம் முக்கிய இடங்களில் துணிவு படத்தை விட குறைவான வசூல் செய்து, நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பட குழுவினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இதை தொடர்ந்து, 'வாரிசு' முக்கிய இடங்களில் சரிவை சந்தித்துள்ளதாக வெளியான தகவல் பட குழுவினரை சற்று அதிருப்தி அடைய செய்துள்ளது. அமெரிக்காவில் 1.6 மில்லியன் வசூல் செய்யும் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற படங்களாக கருதப்படுகின்றன. ஆனால் படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆகியும் இதுவரை 1.1 மில்லியன் மட்டுமே வசூலித்துள்ளதால் வாரிசு படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.