Vijay Antony: சுயநினைவை இழந்த நிலையில் நடிகர் விஜய் ஆன்டனி..! நாளை நடைபெறும் அறுவை சிகிச்சை... என்ன ஆச்சு?

First Published | Jan 18, 2023, 2:36 PM IST

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு... படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில், தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், பட தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், என பன்முக திறமையோடு விளங்கும் விஜய் ஆண்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை விட, ஒவ்வொரு படத்திற்கும் தன் வித்தியாசமான நடிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தி வருவது இவருடைய மிகப்பெரிய பிளஸ் என கூறலாம். அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான' திமிர் பிடித்தவன்', 'கொலைகாரன்', 'பிச்சைக்காரன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது.

Breaking: பிரபல நடிகரின் படப்பிடிப்பில் திடீர் விபத்து! லைட் மேன் உயிரிழந்ததால் பரபரப்பு!

Tap to resize

இதைத்தொடர்ந்து தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2', கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் போன்ற அடுத்தடுத்த படங்களில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பிச்சைக்காரன், படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த விபத்தின் போது, எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மேல் மூலம், கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்.. பின்னர் மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது.

வாரிசு படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட குஷ்புவின் காட்சிகள்! காரணம் இதுவா?

தற்போது விஜய் ஆண்டனி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சுயநினைவை இழந்த நிலையில் உள்ள அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாளை அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல் அவருடைய முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest Videos

click me!