தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஹன்சிகாவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், சிம்பு, ஆர்யா, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.
உடல் எடை அதிகரித்ததால் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஹன்சிகா தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் மீண்டும் நடிப்பில் பிசியாகி உள்ளார். இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது இவர் கைவசம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.