உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 60 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம், ராம் மற்றும் ஆயிஷா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 11 போட்டியாளர்கள் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கணிப்பின் படி இந்த வாரம், மணிகண்டன் அல்லது ஏடிகே ஆகிய இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான, ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் விதிமுறைகளில் மீறக்கூடாத விதிமுறைகளில் ஒன்றான, நாமினேட் செய்ய உள்ள போட்டியாளர் குறித்து, மற்றொரு போட்டியாளரிடம் விவாதிக்க கூடாது என்பது... ஆனால் இந்த விதிமுறையை ஜனனி மீறினார். ஷிவினை நாமினேட் செய்யப்போவதாக அமுதவாணனிடம் அவர் பேசியதை... நேற்று குறும்படமாக வெளியிட்டு, வெளுத்து வாங்கினார் கமல்.
இந்த நிலையில், நெட்டிசன்களில் எலிமினேஷன் லிஸ்ட்ல் இடம்பிடிக்காத போட்டியாளரான ஜனனி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க நெருங்க... நிகழ்ச்சி மீண்டும் கடுமையான டாஸ்குகள் மூலம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.