இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. இந்த படத்தில், நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார். அப்பா - மகள் பாசத்தை அற்புதமாக இயக்குனர் படமாக்கி இருந்ததாக இப்படம் விமர்சனம் ரீதியாக தொடர்ந்து பாராட்டுகளை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, சித்திரையில் நிலா சோறு, சைவம், விழித்திரு போன்ற சில தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தமிழை தாண்டி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் சாரா.
சாரா தற்போது 17 வயதை எட்டிவிட்டதால், ஹீரோயின் கதையம்சம் மற்றும் துணிச்சலான வேடங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் அடுத்ததாக நடித்து வரும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படத்தில், பேபி சாரா சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.