தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்க்கும் நிலையில், தற்போது கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள சத்யபாமா யூனிவர்சிட்டியில் நடந்த நிகழ்ச்சியில் தான், நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.சத்யபாமா யூனிவர்சிட்டி தன்னுடைய 35 ஆம் ஆண்டு வெற்றிவிழாவை கொண்டாடுகிறது. இந்த யூனிவெர்சிட்டியின் அம்பாசிடராக நடிகை நயன்தாரா உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்குள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல சவால்களை கலந்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, கல்லூரி விழாவில் இப்படி பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது என்றே கூறலாம்.
நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன 4 மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையையும் பெற்றெடுத்தார்.
அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வரும் நயன்தாரா, கோலிவுட் திரையுலகை தாண்டி... போவுட்டிலும் கால் பதித்துள்ளார். பாலிவுட் கிங் காங் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா கால்ஷீட் கேட்டு வீட்டுக்கு வந்த இயக்குனரிடம்... அநாகரிகமாக பேசி, கேவலப்படுத்தி அனுப்பினாரா சிவகுமார்?