படிக்கும்போதே சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறியவர் விஜே மகேஸ்வரி. தன்னுடைய தந்தை ஆதரவின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தன்னுடைய படிப்பு செலவு மற்றும் குடும்ப பொறுப்புகளையும் ஏற்கும் நிலையில் இருந்ததால், படித்துக் கொண்டே தொகுப்பாளர் பணியை வெற்றிகரமாக செய்தார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலக நினைத்தார் மகேஸ்வரி. ஆனால் விதி இவரை விலக விடவில்லை என்று தான் கூறவேண்டும். திருமணமாகி குழந்தை பெற்ற ஒன்றரை வருடத்திலேயே, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் வேறு வழி இன்றி மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். மேலும் திருமணத்துக்கு பின்னர் இவர் நடித்த சீரியல்கள் மற்றும் தொகுத்து வழங்கிய அதிர்ஷ்ட லக்ஷ்மி போன்ற நிகழ்ச்சிகள் மகேஸ்வரிக்கு நல்ல ரீச் கொடுத்தது.
அதிலும் சமீப காலமாக கூடுதல் கவர்ச்சியுடன் இவர் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. வெள்ளித்திரை ஆசையுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஸ்வரிக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் முன்கோபம் காரணமாக குறைவான வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டார்.
இளம் நடிகைகளுக்கு ட்ஃப் கொடுக்கும் லுக்கில் இருக்கும் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சர்யத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடைசியாக மகேஸ்வரி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்த 'விக்ரம்' படத்தில், விஜய் சேதுபதியின் இரண்டாவது மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.