தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சிவகுமார். திரைப்படங்களை தாண்டி சில முக்கிய சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக, திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், யோகா, ஓவியம், மற்றும் தன்னுடைய மகன்கள் செய்யும் நலப்பணி திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து சிறந்த கதைககளையும், சமூக பொறுப்புடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் எதாரணமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஜெயபாரதி, சூர்யாவிற்கு கதை சொல்ல வந்தபோது, அவரை பழம்பெரும் நடிகர் சிவகுமார் நாகரீகம் இல்லாதா வார்திகள் பேசி அவரை அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவரின் படங்களில் நடித்தால், தன்னுடைய மகனின் திரையுலக வாழ்க்கை கேள்வி குறியாக கூட மாறலாம் என... படத்தின் கதையை கூட கேட்காமல் சிவகுமார் திருப்பி அனுப்பியுள்ளார் என தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.