சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!

First Published | Feb 6, 2023, 2:30 PM IST

90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை தேவயானியின் மகள், இனியா சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோயின் லிஸ்டில் இருந்தவர் நடிகை தேவயானி. அஜித், விஜய், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்திலும், சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை தேவயானி, பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல் தோற்றம் கொண்டவர். இதுவே இவருக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைத்தது.  இவரை பல படங்களில் எதார்த்தமான கதாபாத்திரங்கள் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.

Tap to resize

அதேபோல் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் தேவயானி. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான காதல் கோட்டை, சூரியவம்சம் நீ வருவாய் என, பிரிண்ட்ஸ், போன்ற பல படங்கள் தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக உள்ளது.

இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானி, திருமணத்திற்கு பிறகும் கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடி முல்லை போன்ற படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது தேவயானி - ராஜ்குமார் தம்பதிக்கு இனியா மட்டும் பிரியங்கா என்கிற இரு மகள்கள் உள்ள நிலையில், தேவயானியின் மூத்த மகளான இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் என்ன சிறப்பு என்றால்... இதுவரை பாவாடை சட்டை போட்ட சிறு பிள்ளையாகவே பார்க்கப்பட்ட இனியா, புடவை அழகியை ஜொலிக்கிறார். அழகில் அம்மா தேவையானியையே இனியா மிஞ்சி விட்டதாக இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Latest Videos

click me!